செல்வோம் வாரீர், இயேசு பேரில்
பாரில் உள்ளோர் ஆசை கொள்ள
அணி அணியாய்க் கூடிவந்து
துதி செலுத்திச் செல்வோமே, செல்வோமே!
1.
ஏழே நாளில் எரிகோ கோட்டை குடை சரிந்து வீழ்ந்ததே
கோல் அடியில் செங்கடலும் இரண்டு பிரிவாய் நின்றதே – 2
கிபியோன் மேலே சூரியனும் ஆயலோனில் அம்புலியும் – 2
நடுவானில் பகல் முழுதும் நின்றதே
செல்வோமே! செல்வோமே! செல்வோமே! – செல்வோம்
2.
சமுத்திரம் புரண்டு வந்தால் இயேசு கதவடைத்துத் தாளிடுவார்
இடிக்கும் மின்னல் ஒளிக்கும் அவரே வழிவகுத்துத் தந்திடுவார் – 2
இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவார் – 2
வல்லவர் நம் நடுவில் வந்தார் – செல்வோமே
செல்வோமே! செல்வோமே! செல்வோமே!- செல்வோம்
3.
முகில் உலாவும் இமயம் தொட்டு அலை இரையும் குமரி வரை
அணி அணியாய் இயேசுவின் கீழ் ஊழியராய்ச் செல்வோமே – 2
நீலவானில் காற்றினுடே சிலுவைக்கொடியை ஏற்றியே – 2
வாழ்க இயேசு நாமம் வாழ்க என்போமே!
செல்வோமே! செல்வோமே! செல்வோமே! -செல்வோமே! – செல்வோம்
selvom varrer, iyesu peril
paril ullor aasai kolla
ani aniyayk kudivanththu
thuthi seluththis selvome, selvome!
1.
eezhe nalil eriko kottai kudai sarinththu veezhnthdhathe
kol adiyil sengkatalum irandu pirivay nindrathe – 2
kibiyon mele suriyanum aayalonil ambuliyum – 2
naduvanil pakal muzhuthum nindrathe
selvome! selvome! selvome! – selvom
2.
samuththiram burandu vanththal iyesu kadhavadaiththuth thaliduvar
idikkum minnal olikkum avare vazhivakuththuth dhanththiduvar – 2
irasikalai athinathin kalaththile varabpannuvar – 2
vallavar nam naduvil vanththar – selvome
selvome! selvome! selvome!- selvom
3.
mukil ulavum imayam thonddu alai iraiyum kumari varai
ani aniyay iyesuvin keezh uuziyarays selvome – 2
neelavanil karrinude siluvaikkodiyai eerriye – 2
vazhka iyesu namam vazhka enbome!
selvome! selvome! selvome! -selvome! – selvom